சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு - யூ.பி.எஸ்.சி.2020-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படு கிறது. இந்த அமைப்பு மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அமைப்பாக செயல்படுகிறது. தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை பணி நிய மனம் செய்து வருகிறது.

தற்போது சிவில் சர்வீஸ் எனப்படும் இந்திய குடிமைப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளை உள்ளடக்கிய இந்த பணிகளில் சேர, இளைஞர்கள் பெரிதும் விரும்புவார்கள். 

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வருடம் 796 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் மாற்று திறனாளிகளுக்கும் கணிச மான பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

முதல்நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுமுறைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும்.

இது தொடர்பாக யூ.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-ம் ஆண்டிற்கான  சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்று (பிப்ரவரி 12) முதல் மார்ச் 3- ஆம் தேதி மாலை 06.00 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய தள முகவரி https://upsconline.nic.in/mainmenu2.php ஆகும். மே 31- ஆம் தேதி தேர்வு நடைபெறும். 

இவ்வாறு யூ.பி.எஸ்.சி. தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments