71-வது இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு ரியாத் மாநகரில் தமுமுக நடத்திய 3வது மாபெரும் இரத்ததான முகாம்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ரியாத் மத்திய மண்டலம்  - அஜிஸியா கிளை & கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய 3வது மாபெரும் இரத்ததான முகாம் 28/02/2020, வெள்ளிக்கிழமை அன்று அஜிஸியா காய்கறி மார்க்கெட் அருகில் காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமிற்கு கிளை தலைவர் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்க ,மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகிக்க,  ரியாத் மண்டல மருத்துவரணி செயலாளர் மங்களகுடி தாஹா ரசூல் அவர்கள் மண்டல நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.


இந்த இரத்ததான முகாம் மண்டல மக்கள் தொடர்பாளர் திருக்கோவிலூர் ஷாக்கிர் பேக் அவர்கள் வரவேற்புரையாற்ற, இரத்ததான வங்கியுடனான தொடர்பை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ரியாத் மத்திய மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளர் அறந்தை சித்திக் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்ய , ரியாத் மத்திய மண்டல சமூக நலத்துறையின் செயல்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த சகோ. முஹம்மது தக்தேஹ் அலன்ஜி (Mohamed Takteh Alanzi ) அவர்களும் இந்த இரத்ததான முகாமிற்காக அஜிஸியா பள்ளியுடனான தொடர்பை சிறப்பாக ஏற்பாடு செய்து தந்த மெளலவி நெளசாத் அவர்களும்  இணைந்து இரத்ததான முகாமை துவங்கி வைத்தனர்.

இந்த இரத்ததான முகாமில் சுமார் 70க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்கேற்று தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர்.


மேலும் இரத்ததான கொடையாளர்களுக்கும் ,களப்பணியாளர்களுக்கும், இரத்தவங்கி ஊழியர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு, தேநீர், பழச்சாறு மற்றும் தண்ணீர் போன்றவைகளை கிளை நிர்வாகிகளான இப்ராஹிம் அவர்கள்  , பீர் முஹம்மது அவர்கள் , அபுபக்கர் அவர்கள் , ஹக்கீம் அவர்கள் மற்றும் ஷாஜி பாய் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த இரத்ததான முகாமிற்காக கடந்த இரண்டு வாரங்களாக கிளை நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் மிக சிறப்பான முறையில் அழைப்பு பணியில் ஈடுபட்டனர் என்று கூறினால் மிகையாகாது.

இந்த இரத்ததான முகாமை திறப்பு விழா செய்த சகோதரர்களுக்கும், முகாமை ஒருங்கிணைத்த சகோதரர்களுக்கும், முகாமிற்கான உணவு மற்றும் வாகன ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும், பல கிளைகளிலிருந்து அஜிஸியாவிற்கு வருகை புரிந்த சகோதரர்களுக்கும், களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும்,  ஊடக ரீதியாக உதவி செய்த ரியாத் மண்டல ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் கோபாலப்பட்டினம் முஹம்மது ரிஸ்வான் மற்றும் முன்னாள் மண்டல தனி செயலாளர் ஆசிக் இக்பால் அவர்களுக்கும், இரத்த வங்கி ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்ட கிளை உறுப்பினர் சகோ. ஜாவித் அவர்களுக்கும்
முகாமிற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய மண்டல - கிளை நிர்வாகிகளுக்கும்
அஜிஸியா கிளை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இது போன்று ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

உங்கள் அனைவரின் அனைத்து உழைப்புகளையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் பொருந்தி கொள்வானாக!!!

இறுதியாக வருகை புரிந்த அனைத்து சகோதரர்களுக்கும் மண்டல தமுமுக மமக தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் நன்றியுரையாற்ற, துவாவுடன் முகாம் இனிதே நிறைவடைந்தது.

தகவல்
தமிழ் தஃவா தமுமுக - மமக 
ஊடகப்பிரிவு 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவூதி அரேபியா

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments