இந்தியாவில் நடந்திருப்பது ‘முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை’ – துருக்கி அதிபர் கடும் தாக்கு..!டெல்லியில் வகுப்புவாத வன்முறைகளால் 38 பேர் பலியாகி உள்ள நிலையில், இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக “படுகொலைகள்” நிகழ்ந்திருக்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையாக தாக்கியுள்ளார்.


மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் CAA ஆதரவாளர்கள் என்னும் பெயரில் வன்முறையாளர்கள் ஆடிய வெறியாட்டத்தில் இதுவரை 38 பச்சை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வன்முறையில் பலர் வீடுகளை இழந்தும், உடமைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முஸ்லீம் சமூகத்தினர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர் குற்றம்சாட்டி உள்ளார். இஸ்லாம் மதம் மற்றும் நம்பிக்கைகள், மற்றும் மக்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட எர்டோகன் காஷ்மீர் குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் எதிராகவே முடிவு எடுத்தார். அதேபோல் பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக உள்ளார்.

இந்நிலையில் துருக்கி தலை நகர் அங்காராவில் அந்நாட்டு அதிபர் எர்டோகன் இந்தியாவில் நடந்த வகுப்பு வாத வன்முறை குறித்து பேசுகையில், “இந்தியா இப்போது படுகொலைகள் பரவலாக இருக்கும் ஒரு நாடாக மாறியுள்ளது. என்ன படுகொலைகள்? முஸ்லிம்கள் படுகொலைகள். யாரால் ? இந்துக்களால்.

தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முஸ்லிம் குழந்தைகளை இரும்பு கம்பிகளை கொண்டு கும்பல்கள் தாக்குகின்றன. இந்த மக்கள் உலகளாவிய அமைதியை எவ்வாறு சாத்தியமாக்குவார்கள். அது சாத்தியமற்றது. அவர்கள் அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் என்பதால் – அவர்கள் ‘நாங்கள் பலமாக இருக்கிறோம்’ என்று கூறுகிறார்கள், ஆனால் அது வலிமை அல்ல” என்று கடுமையாக பேசி உள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments