கொரோனா வைரஸ் எதிரொலி.! சளி, காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.. அரசு சுற்றறிக்கை!



இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்தது.


இந்த நிலையில், கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை, தாய், குழந்தை மற்றும் இரு உறவினர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி இந்தியா வந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது.இது தொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று  அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் இருமல், தும்மல் ஆகியவற்றின்  போது கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கைகளை தூய்மையாக வைக்கின்றபொருட்டு  அடிக்கடி தங்கள் கைகளை கழுவ வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த  விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments