R.புதுப்பட்டிணம் கடற்கரையில் ஆள் இல்லாமல் கரை ஒதுங்கிய இலங்கை படகு...



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள ஆர்.புதுப்படினம் கடல் கரையில் இலங்கையை சேர்ந்த ஒரு படகு ஆள் இல்லாமல் கரை ஒதுங்கியுள்ளது. இந்தப் படகில் வந்தவர்கள் யார்? எப்படி கரை ஒதுங்கியது என்பது பற்றி திருப்புனவாசல் கடலோர போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.


இந்தியக் கடலில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறிய பிறகு கடத்தல்கள் இலங்கையில் இருந்து  இந்திய கடல் வழியாகவே அதிகம் நடக்கிறது. தங்கம் போன்ற கடத்தல் பொருட்களுடன் வருபவர்கள் இங்கிருந்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களுடன் இலங்கை செல்கின்றனர்.  இதற்காக நவீன படகுகளில் வரும் கடத்தல் கும்பல்கள் எங்கோ ஒரு இடத்தில் மறைந்திருந்து பொருளை பெற்றுச் செல்கின்றனர். இப்படி வரும் படகுகள் பல நேரங்களில் தமிழக கரைகளில் ஒதுங்கிவிடுகிறது.

ஞாயிற்றுக்கிழமை  08-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம்   திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலையம் மற்றும் மீமிசல் காவல் சரகம் ஆர். புதுப்பட்டினம் மீனவ கிராம கடற்கரையில் OFRP- A-3821 MNR என்ற பதிவு எண் கொண்ட ஆளில்லாத Suzuky என்ஜின் பொருத்திய இலங்கை பைபர் படகு ஒன்று 11.50 மணிக்கு கரை ஒதுங்கி உள்ளது. இந்தப் படகில் யார் வந்தது என்பது பற்றிய விசாரனை நடைபெற்றுவருகிறது.

Source: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments