கோபாலப்பட்டிணத்தில் தொடங்கியது ஷாகின் பாக் தொடர் காத்திருப்புப் போராட்டம்..! (படங்கள்)



குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கூட்டமைப்பு சார்பில்  தொடர் காத்திருப்புப் போராட்டம் இன்று 01.03.2020 காலை 11.00 மணி முதல் தொடங்கியது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை ஆண்கள் விடுதி அருகாமையில் நடைபெற்று வரும் இந்த தொடர் முழக்க போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.






கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments