GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக நான்காம் கட்டமாக 50 ஏழை எளிய மக்களுக்கு பொருட்கள் விநியோகம்.! (படங்கள்)



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக #Covid19  #144  தடை உத்தரவு காரணமாக பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்புகள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மூன்றாம் கட்டமாக 150 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நான்காம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு கொடுக்கும் பொருட்டு ஏற்கனே இருந்த பாக்கி இருப்பு மற்றும் பல நன்கொடையாளர்களிடம் இருந்தும் நமது ஊரில் உள்ள சமூக சேவைகளில் ஈடுபடும் அமைப்புகளிடம் இருந்தும் நன்கொடை பெற்று நேற்று 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை நான்காம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு வினியோகம் (இதில் மீமிசல் வண்ணன்கோட்டையை சேர்ந்த 12 குடும்பங்கள் அடங்கும்) செய்யப்பட்டது. 

✴நான்காம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக GPM மீடியா அட்மீன்கள் மற்றும் சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் முன்னிலையில் பயனாளிக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்புகள் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது. 

✴இந்த பணியை மிகச் சிறப்பாக செய்த கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு GPM மீடியா சார்பாக பாராட்டுக்கள்.

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே...

✴இதற்காக பொருளாதார உதவியளித்த உள்ளூர்வாழ் மக்கள், சுற்றுவட்டார மக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் சகோதர நல்லுள்ளங்களுக்கும் மற்றும் இதற்காக உழைத்த அனைத்து சகோதரர்களுக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அலப்பெரிய நன்மைகளை வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றோம். ஆமீன்....

எங்களுடைய பணிகள் வெற்றியடைய இறைவனிடம் பிராத்தனை செய்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:

கோபாலப்பட்டிணம் கொரோனா உதவி குழுமம்,
கோபாலப்பட்டிணம், 
மீமிசல், 
ஆவுடையார்கோவில் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு:

அப்துல் சுக்கூர் -97902 82250, முகம்மது ராவுத்தர் -77087 41786, சாகுல் ஹமீது -883 898 6985, முகம்மது யஹ்யா -90877 74541,வாசிம் அக்ரம் -96592 16376,B.அசாருதீன் -85266 30312, K.அசாருதீன் -86102 16617

GPM மீடியா - wa.me/918270282723

குறிப்பு: GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக வசூல் செய்யப்பட்ட அனைத்து பொருளாதார நிதிகள் பற்றிய வரவு மற்றும் செலவு சம்மந்தமான விபரங்கள் அனைத்தும் இன்ஷா அல்லாஹ் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.





கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments