கோபாலப்பட்டிணம் மக்களுக்கு கோட்டைப்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர் அவர்களின் முக்கிய அறிவிப்பு.!கோபாலப்பட்டிணம் மக்களுக்கு கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் உள்ள வீடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள் மின்கம்பிகளில் உரசிக்கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி மின்பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. எனவே உங்கள் வீடுகளில் உள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பியில் உரசும்படி இருந்தால் அதை உடனடியாக அகற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறாக அவை அகற்றப்படவில்லையென்றால் உங்கள் வீட்டு செல்லக்கூடிய மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே கோபாலப்பட்டிணம் மக்கள் உங்கள் வீட்டில் உள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பியில் உரசும்படி இருந்தால் இரண்டு (21.04.2020-22.04.2020) நாட்களுக்குள் அகற்றி மின்வாரித்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

அவ்வாறு அகற்றவில்லையென்றால் மின்வாரியம் எடுக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள்..

தகவல்: சோபனா, உதவி பொறியாளர், துணை மின் நிலையம், கோட்டைப்பட்டினம்.புதுக்கோட்டை - மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments