மணமேல்குடி அருகே குழிக்குள் இறந்து கிடந்த மீனவர்.!



மணமேல்குடியை அடுத்த வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (45). மீனவரான இவர் கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.


அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் மணமேல்குடி வடக்கூர் பகுதியில் ஒரு குழியில் இறந்து கிடந்தார். மேலும் அங்கு மதுபாட்டில்கள் கிடந்தன. இது தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் மது குடித்து இறந்தாரா? அல்லது வேறு யாராவது அடித்து கொன்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments