கோபாலப்பட்டிணம் பெரியபள்ளிவாசலில் தமிழக அரசின் நோன்பு கஞ்சி அரிசி ஊர் மக்களுக்கு வினியோகம்.!



தமிழக அரசின் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு வழங்கிய அரிசியை குடும்ப அட்டைகளின் அடிப்படையில் 2கி வீதம் வழங்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தமிழக அரசு வழங்கிய 3000 கிலோ பச்சரிசியை தமிழக அரசின் ஆணைக்கிணங்க பெரிய பள்ளிவாசலில் வைத்து ஊர் மக்களுக்கு கடந்த 06.05.2020 புதன்கிழமை முதல் 08.05.2020 வெள்ளிக்கிழமை வரை சுமார் 1120 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு அட்டைக்கு 2கிலோ வீதம் மொத்தம் 2240 கிலோ அரிசி சமூக இடைவெளி பின்பற்றி வழங்கப்பட்டது.


அடுத்த கட்டமாக மீதம் இருந்த அரிசியை இன்று 9.05.2020 சனிக்கிழமை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 10 நபர்களுக்கு 5கிலோ வீதம் மொத்தம் 50கிலோ அரிசி வழங்கப்பட்டது.மேலும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்கள்,பிலால்கள் பெண்கள் மதரஸாவில் பணிபுரியும் ஆலிமாக்கள், மற்றும்  நமது ஊர் குடிமகன்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று 61 நபர்களுக்கு டோக்கன் வழங்கி நபர் ஒருவருக்கு 10கிலோ வீதம் மொத்தம் 610கிலோ வழங்கப்பட்டது.


தமிழக அரசிடமிருந்து வந்த 3000கிலோ அரிசியில் 2900கிலோ அரிசி மட்டுமே இருந்தது. அவை அனைத்தும் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 100கிலோ அரிசி இல்லை என்பதை நமது ஊர் மக்களுக்கு இதன் மூலம் தெரிவித்து கொள்கின்றோம். 


இப்படிக்கு..
ஜமாஅத் நிர்வாகம், கோபாலப்பட்டிணம்.

தகவல்: ஜமாஅத் நிர்வாக குழு.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments