ஆவுடையார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை பெற வாட்ஸ்ஆப்பில் விண்ணப்பிக்கலாம்: வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்.!



ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது:- பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் என்ற அளவில் 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் பதிவு செய்த சில விவசாயிகளுக்கு 3-வது தவணையாக ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு ஆதார் எண்ணில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. எனவே, பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறுவதில் பிரச்சினை உள்ள விவசாயிகள் கீழ்க்கண்ட உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தங்களது ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு எண் உள்ள பக்கத்தை அனுப்புவதன் மூலம் சீர்திருத்தங்களை செய்து தொடர்ந்து ஊக்கத்தொகையை பெறலாம். 

ஆவுடையார்கோவில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வராணி - 75026 98412, 
வேட்டனூர் உதவி வேளாண்மை அலுவலர் மணிமேகலை - 76391 96632, 
மீமிசல் உதவி வேளாண்மை அலுவலர் அறிவுக்கரசி - 97510 93091, 
திருப்புனவாசல் உதவி வேளாண்மை அலுவலர் ராஜேஸ் - 97871 53427. இவ்வாறு அவர்அதில்கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments