சென்னையில் இருந்து புதுக்கோட்டை வந்த 13 வயது சிறுமிக்கு கொரோனா.!புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மிரட்டுநிலை கிராமத்தை சுற்றி 8 கி.மீ. அளவுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து புதுக்கோட்டையில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வருகின்றனர். இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து புதுக்கோட்டைக்கு 60 வயதுடைய தொழிலாளி ஒருவர் வந்தார். அவரை ராணியார் மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர். அவரது ரத்தம், சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டன. 

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இருப்பினும் தொற்று உறுதியா? இல்லையா? என்பதை சுகாதாரத்துறையினர் முறைப்படி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் முதியவர் வசித்த பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிகாரிகள் நேற்று இரவு அந்த பகுதியில் திரண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் சென்னை கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் இங்கு வந்த 21 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஆயிங்குடி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments