மீமிசலில் மஜக சார்பில் கருப்பு கொடி ஏந்தி நூதன போராட்டம்.!!மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் காவிரி ஆணையத்தின் தன்னதிகாரம் மீட்க மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரியதரிசி நகரில் வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.


தமிழக காவிரி மேலாண்மை குழுவை மத்திய அரசின் நீராற்றல் துறைக்கு கீழ் கொண்டு வந்து காவிரி மேலாண்மை குழுவின் உரிமையை பறிக்கும் விதமாக மத்திய அரசு இந்த ஊரடங்கிலும் கிருமித்தனமான சட்டத்தை இயற்றுகிறது. இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீட்டில் இருந்த படியே அவரவர் வீட்டில் முன்பு நின்று கண்டன பதாகையை ஏந்தியும் கருப்பு கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அதன் ஒரு பகுதியாக மனித நேய ஜனநாயக கட்சி மீமிசல் கிளை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர், மாணவர் இந்தியா புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் மு.முகமது யாசின் மற்றும்  கட்சி உறுப்பினர்கள் தலைமையில் நேற்று 07.05.2020 மாலை 5.30 மணி முதல் 5.45 மணி வரை வீட்டு வாயிலின் முன்பு நின்று கண்டன பதாகையுடன் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவல்: மு.முகமது யாசின், கோபாலப்பட்டிணம்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments