புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்ட நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு.!



வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைபுரிபவர்கள் பற்றி கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று  கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.


இதுபற்றி அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்பி வருகைபுரிகின்றனர். இந்நபர்கள் குறித்த விபரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் முறையாக பதிவு செய்யப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சூழ்நிலையில் சென்னை, கோயம்பேடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைபுரிபவர்கள் தாங்களாகவே முன்வந்து 1077 அல்லது  04322-222207 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைபுரிபவர்கள் தங்கள் வீட்டின் அருகில் இருப்பது தெரியவந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட  கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments