தீவிரமடையும் 'நிசர்கா' புயல் – 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.!



தென் மேற்கு அரபிக்கடலில் உருவாக்கியுள்ள நிசார்கா புயல் நாளை மகாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நிசார்கா புயல் கோவாவுக்கு 280 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும், குஜராத்தில் இருந்து 710 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது இன்று பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்- டாமன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிசார்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் மும்பை, பால்கர், தானே, ராய்காட், கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments