2020 ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் ரத்து.! இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு: பணம் கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெற்று கொள்ள விண்ணப்பிக்கலாம்.!கொரோனா நோய் தொற்று காரணமாக 2020-ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயண ஏற்பாடுகளை ரத்து செய்து கொள்ள இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.


இவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில் சவூதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரையை ரத்து செய்து கொள்ள வழிகாட்டப்பட்டுள்ளது.

ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஹஜ் கமிட்டி முகவரிக்கு அனுப்பி வைத்த பின்னர் அவர்களுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ஹஜ் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த PDF கோப்புகளை http://hajcommittee.gov.in/ and www.hajjtn.com என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments