கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா.?கொரோனா அறிகுறி இருந்தால் அந்த மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆசிரிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை அவசியம் என தெரிவித்துள்ளது.

பள்ளி நுழைவாயிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு 97 டிகிரி வரை வெப்பநிலை உள்ளவர்கள் மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதி அளிக்கப்படுவார்கள் எனவும், 97 டிகிரிக்கு மேலே இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா அறிகுறி இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேர்வு காலங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு நிகழ்வுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments