ஆலங்குடி அருகே சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை.! போக்சோ சட்டத்தில் கைது.!ஆலங்குடி அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தில் நேற்று போலீசார் சிறையில் அடைத்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள லெட்சுமி நரசிம்மபுரம் அனவயலை சேர்ந்த வளமுடன் தெருவில் வசித்து வரும் மாணிக்கன் மகன் பாஸ்கர் (39) விவசாயி திருமணம் ஆகாதவர். அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் ஸ்ரீதேவி பெயர் மாற்றப்பட்டுள்ளது.

சிறுமியிடம் செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி பாஸ்கர் அவ்வப்போது ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்த நிலையில் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு பாஸ்கரை ஊர்மக்கள் சுற்றிவளைத்து வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் வடகாடு காவல் ஆய்வாளார் பரத்ஸ்ரீனிவாசன் மற்றும் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமலதாவிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் புகாரையடுத்து பாஸ்கரரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லகண்ணன் முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். சிறுமியை ஆசைவார்த்தை கூறி இளைஞர் கற்பளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments