மீமிசல் நியூ சங்கீத் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான பட்டினிப் போராட்டம்.!



தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில் நேற்று 10.07.2020 பட்டினிப் போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிவித்திருந்தார்.


அதன்படி புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அளவில் தனியார் பள்ளிகள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளிகளை திறக்காமல், மாணவர் சேர்க்கை நடத்தாமல், புதிய பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியருக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். 

தனியார் பள்ளிகள் 2018&19-ஆம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தில் சேர்த்த 25 சதவீத மாணவருக்கு கல்விக் கட்டணம் 40% நிலுவையில் உள்ளது. 2019&2020-ஆம் ஆண்டு கல்வி கட்டண பாக்கி முழுமையாக நிலுவையில் உள்ளது. 

இதை அரசு உடனடியாக வழங்கினால் கூட தனியார் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டு இபிஎப், இஎஸ்ஐ சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியும் செவி சாய்க்காததையடுத்து தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரில்லாத ஊழியர், டிரைவர் என 5 லட்சம் பேர் இந்த பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

காலை 10.00 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5.00 மணி வரை அவரவர் பள்ளிகளில் அரசு வகுத்த நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் பட்டினி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட தலைவரும், மீமிசல் சங்கித் பள்ளி தாளாளருமான ராமசாமி ஆசிரியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 5 மணி வரை பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments