நபிகளார் குறித்து கேளிசித்திரம் வரைந்த கார்டூனிஸ்ட் வர்மா என்பவரை கைது செய்ய கோரி SDPI மற்றும் PFI புகார் கொடுத்ததன் எதிரொளி! வர்மா கைது!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனுவின் மீது வழக்கு பதிவு செய்து  கார்டூனிஸ்ட் வர்மா (எ) சுரேந்திரகுமார்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

முகநூலில் மதகலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலாக மதிக்ககூடிய 
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைவேன் என முகநூலில் பதிவிட்டிருந்த கார்டூனிஸ்ட் வர்மா (எ) சுரேந்திரகுமார் என்பவனை கைது செய்ய கோரி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட 
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி 13.07.2020 அன்று வர்மா என்பவனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விழுப்புரம் ஏரியா தலைவர் ரியாஸ் அலியின் புகாரின்  அடிப்படையில் குற்ற எண் 1490/2020, என்ற நெம்பரில் 295(A), 504, 505(1), 505(2), 153(A) படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் தாலுகா காவல் துறையால் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி 27.07.2020 அன்று வரை 15 நாள்  சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments