கோபாலப்பட்டிணம் கடற்கரைக்கு வந்த தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து கப்பல் ‘ஹோவர்கிராப்ட்‘ (வீடியோ&படங்கள்)பாறைகள், பனிக்கட்டிகள் மிகுந்த பகுதிகளிலும் வேகமாக பயணிக்கும் இந்திய கடற்படையின் அதிநவீன ரோந்து கப்பல் ஹோவர் கிராப்ட் கோபாலப்பட்டிணம் கடற்கரைக்கு வந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று 14.07.2020 செவ்வாய்க்கிழமை நற்பகல் 2.15 மணியளவில் கோபாலாப்பட்டிணம் கடற்கரைக்கு தண்ணீரிலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து கப்பல் ‘ஹோவர்கிராப்ட்‘ வந்தது. ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் கோபாலாப்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு வந்தது. 

இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்ததுடன் அதனுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த கப்பல் அதிக தூரம் பயணித்ததால் இன்ஜினில் வெப்பம் அதிகமானதால் அதை குறைப்பதற்காக சுமார் அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


கடலிலும், நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல் இந்திய கடற்படையில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.கடல் வழியாக மது வகைகள், தங்கம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்களை கண்காணிக்கவும் இந்திய கடலோர காவல்படையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ரோந்து பணிக்காக அவர்கள் பயன்படுத்தும் கப்பல்களில் முக்கியமானதாகவும், நவீனமானதாகவும் பார்க்கப்படுவது ஹோவர் கிராப்ட்

ஹோவர் கிராப்ட் கப்பல்கள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். கடலோர காவல்படை ரோந்து பணிக்காக பிரிட்டனிலிருந்து ஆறு ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலை இந்திய கடற்படை வாங்கியுள்ளது. ஒரு ஹோவர் கிராப்ட்டின் விலை 20 கோடி ரூபாயாகும். மணிக்கு 45 நாட்டிகல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஹோவர் கிராப்டில் அதிகபட்சமாக 15 பேர் வரை செல்ல முடியும்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments