தொலைதூரக்கல்வி மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத 21-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.!சென்னை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கே.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் இளங்கலை, முதுகலை, பி.லிஸ் மற்றும் எம்.லிஸ் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கான ஜூன் 2020 செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. 7-ந்தேதி (இன்று) முதல் வருகிற 21-ந்தேதி வரை அபராதம் இல்லாமலும், 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments