அறந்தாங்கி அருகே கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு.!



அறந்தாங்கி அருகே கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சிலோன் காலனியை சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். பின்னர், அவரது உடல் அறந்தாங்கி கொண்டு வரப்பட்டு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்தவரை இங்கு தகனம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments