கட்டுமாவடியில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்றவர் கைது.!கட்டுமாவடியில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடி கடைவீதியில் ஆன்-லைன் மூலம் கேரளா லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில், போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது கடைவீதியில் லாட்டரி சீட்டு விற்ற கட்டுமாவடி மீனவர் தெருவை சேர்ந்த வீரகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments