துஞ்சனூர் ஊராட்சியை சேர்ந்த இரு தரப்பினர் இடையே தகராறு; 7 பேர் மீது வழக்கு.!ஆவுடையார்கோவில் தாலுகா, துஞ்சனூர் ஊராட்சியை சேர்ந்த மேலக்கரை கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை சிலர் பட்டா வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நிலத்தை பார்க்க ஜெயசீலன், அருளானந்து மற்றும் சிலர் சென்றிருந்தனர். அப்போது மேலக்கரை கிராமத்தை சேர்ந்த சிலர் புறம்போக்கு நிலத்தை அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுக்க வேண்டும். நீங்கள் பணத்தை கொடுத்து தங்கள் பெயரில் பட்டா செய்து கொண்டு இங்கு விதைக்க வந்து இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். 

இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் கரூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், மேலக்கரையை சேர்ந்த அருளானந்து உள்பட 5 பேர் மீதும், எதிர் தரப்பை சேர்ந்த புனிதவேலு மனைவி ராதிகா உள்பட 2 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments