கண்ணியமிகு ஆலிம்கள், மஸ்ஜித்களின் நிர்வாகப் பெருமக்கள் மற்றும் சமுதாயப் பிரமுகர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கான நேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வாக்காளர் சரிபார்ப்புப்பணி வரும் 12.12.2020 & 13.12.2020 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் நடைபெற இருக்கிறது.
சிறுபான்மை மக்களின் வாக்குரிமையை கேள்விக்குரியதாக ஆக்கும் அரசியல் சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம் சிறுபான்மையினர் தங்களது அடிப்படை உரிமையை பாதுகாத்துக்கொள்ள அதிக விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியமாகும்.
எனவே, கண்ணியமிகு ஆலிம்கள், மஸ்ஜித்களின் நிர்வாகிகள், சமூக சேவகர்கள் அனைவரும் இனைந்து தங்கள் மஹல்லாக்களில் உள்ள மக்கள் தமது பெயர் வாக்களர் பட்டியலில் சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், தவறு இருப்பின் அதை திருத்துவதற்கான வழிமுறைகளை அறிவித்துக் கொடுக்கவும்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மையங்களுக்கு வழிகாட்டவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொள்கிறது
மேலும் மொபைல் வழியாக ஆன்லைன் மூலம் நமது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ள முடியும் என்பதால் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் படித்த இளைஞர்கள் மூலம் நம் மக்களுக்கு உதவிட உரிய ஏற்பாட்டைச் செய்திடுமாரும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இது குறித்து வரும் ஜும்ஆக்களில் விளக்கி அறிவிப்புச் செய்வதும் சிறப்பானதாகும்.
அல்லாஹ் நமது நாட்டையும் மக்களையும் நீதி கருணை மற்றும் வெற்றிப்பாதையில் செலுத்தியருள்வானாக! ஆமின்.
இவ்வாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.