2020-ஆம் ஆண்டிற்கான எஸ்.டி.பி.ஐ கட்சியின் விருதுகள் பெறும் சாதனையாளர் பெயர்கள் அறிவிப்பு.!!இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றது எஸ்.டி.பி.ஐ. கட்சி. சிறந்த பொதுநல தொண்டுக்காக காயிதேமில்லத் விருதும், சிறந்த மனித உரிமை களப்பணிக்காக தந்தை பெரியார் விருதும், ஒடுக்கப்பட்டோர் நலன் உழைப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் விருதும், சிறந்த கல்விச் சேவைக்காக காமராசர் விருதும், தமிழ் இலக்கியம் மற்றும் சிறந்த எழுத்து ஆளுமைக்காக கவிக்கோ விருதும், சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்காக நம்மாழ்வார் விருதும், சிறந்த சமூக சேவைக்காக அன்னை தெரசா விருதும், ஃபாசிச மற்றும் மதவெறி சக்திகள் எதிர்ப்பு களத்தில் பழனிபாபா விருதும் வழங்கி வருகின்றது. 

அதன்படி இந்த ஆண்டுக்கான (2020) விருதுகளை பெறுவோர்களை தேர்ந்தெடுக்க விருது கமிட்டி குழுவும் அமைக்கப்பட்டது.

அந்த குழு கீழ்கண்ட நபர்களை விருதுக்காக தேர்வு செய்துள்ளது:

       விருதுகளும்                           –           பெறுபவர்களும்

1.காயிதே மில்லத் விருது:திரு. தா.பாண்டியன் (மூத்த தலைவர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

2.தந்தை பெரியார் விருது:திரு. தியாகு (பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் கட்சி)

3.டாக்டர் அம்பேத்கர் விருது:திரு. டி.எம்.உமர் பாரூக் (மறைவு)  (நிறுவனர், நீலப்புலிகள் இயக்கம்)

4.காமராஜர் விருது:பேராசிரியர் திரு. சாதிக் (முன்னாள் துணை வேந்தர், சென்னை பல்கலைக் கழகம்.)

5.பழனிபாபா விருது:திரு. காயல் மகபூப் (மூத்த தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

6.கவிக்கோ விருது: கவிமாமணி பேரா. திரு. தி.மு.அப்துல் காதர் (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், வாணியம்பாடி இஸ்லாமிய  கல்லூரி)

7.அன்னை தெரசா விருது:பேரா. திரு. தீபக் (தலைவர், டிசம்பர் 3 இயக்கம்)

8. நம்மாழ்வார் விருது:திருமதி. சரோஜா தேவி (இயற்கை விவசாயி)

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் 17 அன்று சென்னையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments