நாளை ஜனவரி 26 கிராம சபை கூட்டம் கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு!



குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் 4 முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். ஆனால், கடந்த ஆண்டு குடியரசு தினத்தை தவிர்த்து வேறு எந்த தினத்திலும் கூட்டம் நடத்தப்படவில்லை. கொரோனாவை காரணம் காட்டி, கூட்டங்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யமும், திமுகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துவது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா காரணமாக குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments