"விவசாயிகளை நசுக்காதே!" - மணமேல்குடி தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்!



டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 கருப்பு சட்டங்களையும் நீக்கக் கோரியும் SDPI கட்சி சார்பில் மணமேல்குடி தபால் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத்தை கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக SDPIகட்சி சார்பில் மாபெரும் போராட்ட இயக்கம் (டிசம்பர் 26 முதல் ஜனவரி 05 வரை) மாநில தலைமை மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் 26-ஆம் தேதி முதல் பல போராட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக எஸ்டிபிஐ கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் மணமேல்குடி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் U.செய்யது அகமது அவர்கள் தலைமை தாங்கினார்கள். இப்போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.
 
போராட்டத்தின் இறுதியாக மணமேல்குடி பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மணமேல்குடி தபால் நிலையத்தை முற்றுகை இடுவதற்காக எஸ்டிபிஐ கட்சியினர் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர். தபால் நிலையத்தை முற்றுகையிட சென்ற எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தகவல்:
சமூக ஊடக அணி,
SDPI கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments