புதுக்குடி மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசுக்கள்.!



புதுக்குடி மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசுக்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன.

கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த முனியகுமார் (வயது 35) என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் சிங்காரவேல் (40), முத்து முனியாண்டி (32), வடிவேல் (38), ஜெகன் (34), பாண்டி (30) ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் 1 மைல் கடல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் வலையில் அரசால் தடைசெய்யப்பட்ட தாய் கடல்பசுவும், அதன் குட்டிகளும் சிக்கின. அழிந்து வரும் பாலுட்டி இனமான கடல்பசுவை மீனவர்கள் வலையிலிருந்து மீட்டு பத்திரமாக கடலுக்குள் விட்டனர். அழிந்து வரும் கடல்பசு இனத்தை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட மீனவர்களை திருச்சி மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் சுதாகர், அறந்தாங்கி வனசரக அலுவலர் சதாசிவம் ஆகியோர் பாராட்டினர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கடல் பசு மனிதர்களை போல் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி வகையை சேர்ந்தது. கடல்பசு கடல் புற்களை உண்டு வாழும் தாவர உண்ணி மீன் இனத்தை சார்ந்தது ஆகும்.அழிந்து வரும் அரிய வகை இனமான கடல்பசுவின் தாய் மற்றும் அதன் குட்டிகளை மீட்டு மீண்டும் கடலில் விட்ட மீனவர்களின் செயல் பாராட்டத்தக்கது. இதே போன்று அனைத்து மீனவர்களும் செயல்பட்டு கடல்பசுவை பாதுகாக்க வேண்டும்.கடல் பசுவை பாதுகாப்பதன் மூலம் கடல் வளம் பெருகும் என்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments