அறந்தாங்கி அருகே இறந்த மாமியார் உடலை வீட்டிற்குள் வைக்க மறுத்த மருமகள்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டையை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 65). இவரது மகன் இறந்ததால் மீனாம்பாளின் வீட்டில் மருமகள் லதா மட்டும் வசித்து வந்தார். லதாவுக்கும், மீனாம்பாளுக்கும் மனக்கசப்பு இருந்ததால் வீட்டின் தாழ்வாரத்தில் மீனாம்பாள் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார்.


இந்த நிலையில் மீனாம்பாள் அறந்தாங்கியில் வசித்து வரும் இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அங்கேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மீனாம்பாளின் உடலை ஆவணத்தாங்கோட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு எடுத்து வந்தனர்.

வீட்டிற்கு கொண்டு வந்தபோது, உடலை வீட்டிற்குள் லதா அனுமதிக்க மறுத்தார். இதனால் பக்கத்து வீட்டினர் சம்மதத்தின் பேரில் அங்கு வைத்து இறுதி சடங்கு நடந்தது.

பின்னர் மீனாம்பாளின் உடலை எடுத்து சென்று இளஞ்செழியன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments