அறந்தாங்கி வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மறுகணக்கெடுப்பு பணி ஆரம்பம்.!



அறந்தாங்கி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) திருமதி சிவயோகம் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட திட்ட அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் அறந்தாங்கி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 6-14  வயது வரை  அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டியது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்  நோக்கமாகும்.

எனவே 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கண்டறிவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்,மே மற்றும் அக்டோபர் மாதங்களில் கணக்கெடுப்பு புதுப்பித்தல் மற்றும் ஜனவரி மாதம் பருவகால இடம் மாறும் தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிதல் முறை என மும்முறை சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இப்பணியின் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வள மேற்பார்வையாளர்கள் பல்வேறு துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக தொழிற்சாலை, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கட்டடப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள், நலத்துறை குழந்தைகள் சிறப்பு பிரிவு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையுடன் இணைந்து சோதனை செய்யும் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

கணக்கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கீழ்  சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் இணைப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது .

 ஆசிரியர் மற்றும்  பயிற்றுநர்கள் கோமதி, சசிகுமார், செல்வராஜ், ஈஸ்வரன், சரவணன், பியூலா சாந்தி. சியாமளா. கோமதி, கவிதா, சுகன்யா,  மகேஸ்வரி, நீலவேணி, செந்தில், இயன்முறை மருத்துவர் சரவணன் ஆகியோர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments