அறந்தாங்கி சங்கம் IAS அகாடமி மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து நடத்தும் அரசுப்பணி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கவிழா.!



அறந்தாங்கி மற்றும் அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களில் பட்டம் பெற்றும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் ஏராளமான ஏழை எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வில் ஓர் வேலை கிடைக்கப் பெற்று தங்கள் வாழ்வை வசந்தமாக்கிக் கொள்ள மிகப்பெரிய வாய்ப்பை வழங்கும் அரசுப் பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் என்னும் சாதனைப் பயணம் அறந்தாங்கியில் நேற்று 13.02.2021 துவங்கியது.

அறந்தாங்கி சங்கம் IAS அகாடமி மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பும் இணைந்து ஏழை எளிய பட்டதாரிகளுக்கு TNPSC, TET, RRB, IAS போன்ற அரசுப்பணி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான துவக்க விழா அறந்தாங்கியில் MMA வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறந்தாங்கி IMA தலைவர் Dr.லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர் Dr.தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் திரு.முகமது முபாரக் வரவேற்புரை ஆற்றினார்.
    
சங்கம் IAS அகாடமியின் நிறுவனர் திரு.யோகராஜ் மாணவர்கள் மத்தியில் பல்வேறு அரசுப்பணிகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
எவர்கிரீன் பள்ளி தாளாளர் திரு.முபாரக் அலி,திசைகள் அமைப்பைச் சார்ந்த திரு.புகழேந்தி, திரு.சுரேஷ்ராஜ், திரு.சற்குருநாதன், திரு.தாஜிதீன், திரு.மணிமுத்து, திரு.கபார்கான், திரு.புவியரசன், திரு.பாஸ்கரன், திரு.ரஜினிகாந்த், திருவிக்னேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
   
இறுதியில் திட்ட இயக்குநர் திருமதி மேகலா நன்றியுரை நிகழ்த்தினார்.
    
தொடர்புக்கு: 9786788830

தகவல்:
Dr.ச. தெட்சிணாமூர்த்தி, MBBS., DDVL.,
தலைவர்,
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம்
9159969415

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments