கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் குடிநீர் விநியோகம் பராமரிப்பு செலவு அதிகமான காரணத்தினால் ஒரு குடம் ரூ.7 என நிர்ணயம்.! நேற்று (பிப்.15) முதல் அமல்.!!



கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் குடிநீர் விநியோகம் பராமரிப்பு செலவு அதிகமான காரணத்தினால் ஒரு குடம் ரூ.7 என நிர்ணயம் செய்யப்பட்டு நேற்று 15.02.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. GPM மக்கள் மேடை கடந்த 08.04.2019 அன்று கோபாலப்பட்டிணம் மக்களுக்கு குறைந்த விலையில் ரூ.5-க்கு வீடு வீடாக சென்று சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வழங்கி வந்தனர். இந்நிலையில் தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் செய்வது தொடர்பான செலவுகள் அதிகரித்துவிட்டதால் GPM மக்கள் மேடையின் விதிப்படி (ByLaw) உறுப்பினர்களிடத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டு பிறகு வாக்குபதிவு நடைபெற்றது.

கடந்த 31.01.2021 அன்று GPM மக்கள் மேடை வாட்ஸ்ஆப் குழுமத்தில் நடைபெற்ற வாக்குபதிவின் அடிப்படையில் ஒரு டோக்கன் மற்றும் ஒரு குடத்தின் விலை ரூ.5-ல் இருந்து ரூ.7-ஆக நிர்ணயம் செய்ய வாக்குபதிவின் முடிவு அமைந்தது.

அதனடிப்படையில் தவிர்க்க முடியாத இந்த விலை உயர்வானது நேற்று 15.02.2021 முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என GPM மக்கள் மேடையின் 6-வது ஆலோசனை குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்: ஆலோசனை குழு 6, GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, பெரிய பள்ளிவாசல் வளாகம், கோபாலப்பட்டிணம். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments