ரேஷன் கார்டு தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 31-க்குள் இ-கேஒய்சி (e-KYC) கட்டாயம்!



தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் இ-கேஒய்சி (e-KYC) பதிவை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) அட்டைதாரர்களுக்கு மட்டும் இந்த நடைமுறை வலியுறுத்தப்பட்ட நிலையில், தற்போது சர்க்கரை கார்டு மற்றும் அரிசி கார்டு உள்ளிட்ட அனைத்து (NPHH) அட்டைதாரர்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

யாரெல்லாம் செய்ய வேண்டும்?
PHH, AAY மற்றும் NPHH என அனைத்து வகையான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் இந்தச் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

வயது வரம்பு
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள 5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.

நிபந்தனை
கடந்த இரண்டு ஆண்டுகளாக நியாயவிலைக் கடைகளில் கைரேகை (Biometric) பதிவு செய்து பொருட்கள் வாங்காதவர்கள் மற்றும் கேஒய்சி முடிக்காதவர்கள் இந்த நடைமுறையை உடனடியாகப் பின்பற்ற வேண்டும்.

கடைசி தேதி
வரும் டிசம்பர் 31, 2025-க்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும்.

பெயர் நீக்கம் செய்யப்படும் அபாயம்
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கைரேகையைப் பதிவு செய்யத் தவறினால், அந்த உறுப்பினரின் பெயர் குடும்ப அட்டையிலிருந்து நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. போலி உறுப்பினர்களைக் கண்டறியவும், அரசின் சலுகைகள் தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடைக்கு (Ration Shop) சென்று, விற்பனையாளரின் உதவியுடன் பயோமெட்ரிக் கருவி மூலம் இந்த இ-கேஒய்சி சரிபார்ப்பை உடனடியாக முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments