திருச்சி அரியமங்கலம் பகுதியில் புகழ்பெற்ற ஜாமிஆ மின்ஹாஜுல் இஸ்லாம் ஷரீஅத் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவர்களுக்கு 'ஹாஃபிழ்' பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த ராஜா முஹம்மது அவர்களின் புதல்வர்களான ஹாஃபிழ் R.முஹம்மது அஸ்லம், ஹாஃபிழ் R.முஹம்மது அர்ஷத் ஆகிய இருவரும் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து, வெற்றிகரமாக 'ஹாஃபிழ்' பட்டம் பெற்றனர்.
சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
கல்வி முடித்து ஹாஃபிழ் பட்டம் பெற்றுத் திரும்பிய மாணவர்களை கௌரவிக்கும் விதமாக, கோபாலப்பட்டிணம் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று 26/12/2025 சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த விழாவில், பள்ளிவாசலின் தலைமை இமாம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பாற்றினார். அவர் தனது உரையில், திருக்குர்ஆனை மனனம் செய்வதன் சிறப்புகள் மற்றும் சமுதாயத்தில் ஹாஃபிழ்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
பொதுமக்கள் பங்கேற்பு
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் ஒரே நேரத்தில் ஹாஃபிழ் பட்டம் பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்க்க சேவைகளில் சிறந்து விளங்கிடவும் மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றிட GPM MEDIA-வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.