பொது இடங்களில் 'Free Wi-Fi' பயன்படுத்துபவரா நீங்கள்? புதுக்கோட்டை காவல்துறை விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!




பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபை (Free Wi-Fi) வசதியைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் இலவச இணைய வசதி வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தும் பொதுமக்களின் வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் (Cyber Criminals) திருட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை ஏன்?
இலவச வைஃபை மூலம் உங்கள் செல்போன் அல்லது கணினியை இணைக்கும்போது, அதையே ஒரு தூண்டிலாகப் பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கு எண், கடவுச்சொல் (Password) மற்றும் ரகசியத் தகவல்களை மர்ம நபர்கள் திருடக்கூடும். இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஆலோசனைகள்
பணப் பரிவர்த்தனை: பொது வைஃபை இணைப்பில் இருக்கும்போது எக்காரணம் கொண்டும் வங்கிச் செயலிகள் (Banking Apps) அல்லது ஆன்லைன் பேமெண்ட்களை செய்யாதீர்கள்.

தகவல் பாதுகாப்பு
முக்கியமான மின்னஞ்சல்கள் அல்லது சமூக வலைதளக் கணக்குகளைத் திறப்பதைத் தவிர்க்கவும்.

விழிப்புணர்வு
இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக பாதுகாப்பு இல்லாத இணைப்புகளைத் தேர்வு செய்ய வேண்டாம்.

உதவிக்கு எங்கே அழைப்பது?
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டாலோ அல்லது பணம் திருடப்பட்டாலோ உடனடியாகச் செயல்படுவது அவசியம்.
சைபர் க்ரைம் உதவி எண்: 1930 (24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்)
இணையதளப் புகார்: www.cybercrime.gov.in

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்களது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments