அறந்தாங்கியில் சமூகநலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு.!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சமூகநலத் துறை சார்பில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, உள்ளிட்ட மூன்று ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 900 பயனாளிகளுக்கு அறந்தாங்கி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இரத்தினசபாபதி மற்றும் ஆலங்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினர்.

முன்னதாக ஆலங்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு திருமண உதவி தொகை 5 ஆயிரம் 25 ஆயிரம் வரை வழங்கினர்.காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை பற்றி கூறினார்கள். ஆனால் கடந்த 2008ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் மாநில அவையில் 380 கோடி ஒதுக்கீடு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.1.2 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய அளவிற்கு தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை புதுக்கோட்டைக்கு கொண்டுவந்து அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மேலும் அந்த திட்டத்திற்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து 700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அதிமுக நிர்வாகிகள் இங்கு பேசுகின்றனர் அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் தனக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பேசினார். 

அதிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வழக்கு என் மீது போடுகிறார்கள் எந்த வழக்கு போட்டாலும் மக்கள் பணி செய்ய தயாராக உள்ளேன் என்றும் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய அறந்தாங்கி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி தொடங்கிய திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவது அதிமுக ஆட்சியில் மட்டும்தான் என்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிக்கின்ற திட்டங்கள் மட்டும் இல்லாமல் அவர் நினைக்கின்ற நலத்திட்டங்களை எல்லாம் பாரபட்சம் பார்க்காமல் செய்து முடிப்பவர் அண்ணன் எடப்பாடியார் என்றும் பேசினார்.

மேலும் பேசிய அதிமுக எம்எல்ஏ,தமிழக முதல்வர் அனைவருக்கும் சமத்துவ தலைவராக இருப்பதாகவும் காவிரி குண்டாறு திட்டத்திற்கு மனமிருந்தால் மார்க்கமுண்டு நிச்சயமாக அந்தத் திட்டம் நிறைவேறும் என்றும் பேசினார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியின் திட்டங்களை இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டதால் காலை முதல் காத்திருந்த பொது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதோடு வரிசையில் செல்லாமல் மேடையில் முன்னெடுத்துச் சென்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநலத்துறை மேற்பார்வையாளர் குமாரவேல் அறந்தாங்கி சமூக நலத்துறை அலுவலர் அனுசியா, ஆவுடையார்கோயில் சமூகநலத்துறை அலுவலர் கார்த்திகாயினி, மணமேல்குடி சமூக நலத்துறை அலுவலர் பாமாலட்சுமி, அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் அரசுமணி, பெரியசாமி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி அதிமுக நகர துணை செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments