அமரடக்கி ஊராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.!அமரடக்கி ஊராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் அமரடக்கி ஊராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் கலையரசிராஜா, துணைத்தலைவர் சசிகலா கலைமணி தலைமையில், மகளிர் திட்டம் வட்டரா இயக்கமேளலர் ஜெயந்தி, வட்டரா ஒருங்கிணைப்பாளர் சத்யா, ஊராட்சி செயலாளர் முன்னிலையில் பொதுமக்களுக்கு ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இப்பேரணியானது அமரடக்கியில் தொடங்கி முக்கிய சாலையான அம்மன் கோவில் வழியாக சென்று காசியார் மடம் மெய்க்கேல் ஆண்டவர் கோவில் அருகில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் அனைத்து மகளிர் குழுக்களின் தலைவவர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்கள் வாக்களிப்பதை பற்றிய விளக்கி கூறினர்.

தகவல்: கலை பிரபு, அமரடக்கி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments