புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் - இமெயில் முகவரி!



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் - இ-மெயில் முகவரி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக ரகு, தேர்தல் செலவின பார்வையாளராக மண்டல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை, திருமயம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக கோவிந்த ராஜ், தேர்தல் செலவின பார்வையாளராக தினேஷ் குமார் மீனா ஆகியோரும், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக அனிமேஷ் தாஸ், தேர்தல் செலவின பார்வையாளராக கார்னி டான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேர்தல் காவல் பார்வையாளராக மட்டா ரவி கிரன் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப் பட்டுள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்க செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் விவரம் வருமாறு:-
ரகு- செல்போன் எண்:9442937961, இ-மெயில் முகவரி: 178and179genobs@gmail.com.
கோவிந்த ராஜ் - செல்போன் எண்:9442937962, இ-மெயில் முகவரி: 180and181genobs@gmail.com.
அனிமேஷ் தாஸ்-9080081469, 9442937963, இ-மெயில் முகவரி: 182and183genobs@gmail.com.
மண்டல்- செல்போன்:8300284417, இ-மெயில் முகவரி: 178and179expobs@gmail.com.
தினேஷ் குமார் மீனா- செல்போன்:8300286191, இ-மெயில் முகவரி: 180and181expobs@gmail.com
கார்னி டான் செல்போன்:8300286579, இ-மெயில் முகவரி: 182and183expobs@gmail.com.
மட்டா ரவி செல்போன் எண்:9467800678, இ-மெயில் முகவரி: pdkpoliceobserver@gmail.com.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments