பொன்பேத்தியில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள பொன்பேத்தி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் திருப்புனவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஆவுடையார்கோவில் ஒன்றியம் பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்து (வயது 47) என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments