அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பேர் போட்டியிடுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்கள் பரிசீலனை கடந்த 20-ந் தேதி நடந்தது. இதில் அறந்தாங்கி தொகுதியில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டன.
நேற்று வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இதில் அறந்தாங்கியில் 5 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதன்படி அறந்தாங்கியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர், அவர்கள் சார்ந்துள்ள கட்சி விவரம் வருமாறு:-
1.ராஜநாயகம் (அ.தி.மு.க.), 2.ராமசந்திரன் (காங்கிரஸ்), 3.ஜுவா (பகுஜன் சமாஜ் கட்சி), 4.அமலதாஸ் சந்தியாகு (புதிய தமிழகம்), 5.ராமலிங்கசாமிஆதித்தன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி), 6.குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி), 7.சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி), 8.சிவசண்முகம் (அ.ம.மு.க.), 9.சேக் முகமது (மக்கள் நீதி மய்யம்), 10.ஹீமாயுன்கபீர் (நாம் தமிழர் கட்சி), 11.அர்ச்சுணன் (சுயே), 12.சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே), 13.செல்வகுமார் (சுயே), 14.தில்லைநாதன் (சுயே), 15.தெட்சிணாமூர்த்தி (சுயே), 16.பாண்டியன் (சுயே), 17.மகேந்திரன் (சுயே), 18.முத்துகருப்பையா (சுயே), 19.முத்துசெல்வம் (சுயே), 20.ராமசாமி (சுயே), 21.வேல்ராஜ் (சுயே), 22.ஜெகதீசன் (சுயே).
வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ள தொகுதியில் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.