கோட்டைபட்டினத்தில் நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி தொகுதியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்!



கோட்டைபட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கடந்த 21.03.2021 அன்று நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் மாநில பேச்சாளர் கிம்லர் மற்றும் மாநில மாணவரணி செயலாளர் இடும்பவனம்.கார்த்திக் அவர்கள் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதினுடைய வேட்பாளர் ஹூமாயூன் கபீர் அவர்களை அறிமுகம்  செய்துவைத்தார்.

இந்நிகழ்வின் இறுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியை சார்ந்த வரும் மற்றும் சமூக சேவகருமாகிய அஜ்மீர் கான் மற்றும் சமூக சேவகர் இம்ரான் அவர்கள் மற்றும்  பல்வேறு கட்சியினை சார்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டம் போட அனுமதி இருந்தும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டம் போட காவல்துறையினர் அனுமதித்தனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments