புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 112 பேர் போட்டி! வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 112 பேர் போட்டியிடுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்கள் பரிசீலனை கடந்த 20-ந் தேதி நடந்தது. இதில் 123 மனுக்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டன. நேற்று வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். 

இதில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் யாரும் வாபஸ் பெறவில்லை. விராலிமலையில் 3 பேரும், ஆலங்குடியில் 2 பேரும், திருமயத்தில் ஒருவரும், அறந்தாங்கியில் 5 பேரும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். மொத்தம் 11 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து இறுதிவேட்பாளர்பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதன்படி புதுக்கோட்டையில் 21 பேரும், கந்தர்வகோட்டையில் 14 பேரும், ஆலங்குடியில் 11 பேரும், விராலிமலையில் 22 பேரும், திருமயத்தில் 22 பேரும், அறந்தாங்கியில் 22 பேரும் என மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர், அவர்கள் சார்ந்துள்ள கட்சி விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை தொகுதி:
1.கார்த்திக்தொண்டைமான் (அ.தி.மு.க.), 2.டாக்டர் முத்துராஜா (தி.மு.க.), 3.சுப்ரமணியன் (தே.மு.தி.க.), 4.மூர்த்தி (மக்கள் நீதி மய்யம்), 5.வெங்கடேஸ்வரன் ( பகுஜன் சமாஜ்). 6.குமார் (மை இந்தியா பார்ட்டி), 7.சசிக்குமார் (நாம் தமிழர் கட்சி), 8.சரவணதேவா (நமது மக்கள் கட்சி), 9.அப்துல்லா (சுயே), 10.கருப்பையா (சுயே), 11.எஸ்.கார்த்திகேயன் (சுயே),12. கார்த்திகேயன் (சுயே), 13.சாகுல்அமீது (சுயே), 14.சவுந்தர்ராஜா (சுயே), 15.தனகோபால் (சுயே), 16.துரைகுணா (சுயே), 17.முத்துக்குமார் (சுயே), 18.ரஜினிகாந்த் (சுயே), 19.ராஜசேகர் (சுயே), 20.விஜயகுமார் (சுயே), 21.வீரயைா (சுயே).

ஆலங்குடி தொகுதி:
1.தர்ம.தங்கவேல் (அ.தி.மு.க.), 2.சிவ.வீ.மெய்யநாதன் (தி.மு.க.), 3.சி.திருச்செல்வம் (நாம்தமிழர் கட்சி), 4.டி.விடங்கர் (அ.ம.மு.க.), 5.க.மணிமேகலை (இந்திய கம்யூனிஸ்டு-மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன்), 6.மா.சின்னத்துரை (பகுஜன்சமாஜ்), 7.பா.பாலமுருகன் (மை இந்தியா பார்ட்டி), 8.நா.வைரவன் (மக்கள் நீதிமய்யம்), 9.சி.ஜெயா (அனைத்து மக்கள் புரட்சி கட்சி), 10.வே.கண்ணதாசன் (சுயே), 11.த.வினாயகமூர்த்தி (சுயே).

கந்தர்வகோட்டை (தனி) தொகுதி:
1.ஜெயபாரதி உதயகுமார் (அ.தி.மு.க.), 2.சின்னத்துரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 3.லெனின் பழனியாண்டி(அ.ம.மு.க.), 4.ரமிலா மோகன் ராஜ் (நாம் தமிழர் கட்சி), 5.ஆசைத்தம்பி (சி.பி.ஐ.எம்.எல். கட்சி), 6.தன்ராஜ் (சுயே), 7.கார்த்திகேயன் (சுயே), 8.கீரை சின்னப்பா (சுயே), 9.ரங்கசாமி (சுயே), 10.இளையராஜா (சுயே), 11.மலர்விழி (சுயே), 12.ரத்தினம் (சுயே), 13.கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் (சுயே), 14.மணிமுத்து (சுயே).

அறந்தாங்கி தொகுதி:
1.ராஜநாயகம் (அ.தி.மு.க.), 2.ராமசந்திரன் (காங்கிரஸ்), 3.ஜுவா (பகுஜன் சமாஜ் கட்சி), 4.அமலதாஸ் சந்தியாகு (புதிய தமிழகம்), 5.ராமலிங்கசாமிஆதித்தன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி), 6.குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி), 7.சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி), 8.சிவசண்முகம் (அ.ம.மு.க.), 9.சேக் முகமது (மக்கள் நீதி மய்யம்), 10.ஹீமாயுன்கபீர் (நாம் தமிழர் கட்சி), 11.அர்ச்சுணன் (சுயே), 12.சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே), 13.செல்வகுமார் (சுயே), 14.தில்லைநாதன் (சுயே), 15.தெட்சிணாமூர்த்தி (சுயே), 16.பாண்டியன் (சுயே), 17.மகேந்திரன் (சுயே), 18.முத்துகருப்பையா (சுயே), 19.முத்துசெல்வம் (சுயே), 20.ராமசாமி (சுயே), 21.வேல்ராஜ் (சுயே), 22.ஜெகதீசன் (சுயே).

திருமயம் தொகுதி:
1.வைரமுத்து (அ.தி.மு.க.), 2.ரகுபதி (தி.மு.க.), 3.முனிராஜ் (அ.ம.மு.க.), 4.சிவராமன் (நாம் தமிழர் கட்சி), 5.செல்வகுமார் (வீர முத்தரையர் முன்னேற்ற கழகம்), 6.திருமேனி (மக்கள் நீதி மையம்), 7.புரட்சி பாலன் (அண்ணா திராவிடர் கழகம்), 8.காந்திபன் (மை இந்தியா பார்ட்டி), 9.சிவகுமார் (புதிய தமிழகம்), 10.பழனியப்பன் (சுயே), 11.அழகு சுப்பையா (சுயே), 12.துரைராஜன் (சுயே), 13.சுந்தரம் (சுயே), 14.மணிகண்டன் (சுயே), 15.முத்து அடைக்கலம் (சுயே), 16.மதியழகன் (சுயே), 17.கார்த்திக் (சுயே), 18.செல்வகுமார் (சுயே), 19.செல்வகுமார் (சுயே), 20.செல்வகுமார் (சுயே), 21.செல்வகுமார் (சுயே), 22.செல்வகுமார் (சுயே).

விராலிமலை தொகுதி:
1.விஜயபாஸ்கர்(அ.தி.மு.க.),2.பழனியப்பன்(தி.மு.க.),3.கார்த்திக்பிரபாகரன் (அ.ம.மு.க.),4.சரவணன் (மக்கள் நீதிமய்யம்), 5.அழகுமீனா (நாம் தமிழர் கட்சி), 6.அழகுராஜா (பகுஜன் சமாஜ் கட்சி), 7.செந்தில்குமார் (மை இந்தியா பார்ட்டி), 8.ஆறுமுகம் (புதியதமிழகம்), 9.விஜய் (அண்ணாதிராவிடார்கழகம்), 10.அப்துல் நாசர் (சுயே), 11.இளையராஜா(சுயே), 12.சையதுமுகமது (சுயே), 13.தனலெட்சுமி (சுயே), 14.திருவேந்திரன் (சுயே), 15.பழனிச்சாமி (சுயே), 16.பாலசுப்பிரமணியன் (சுயே), 17.மணிகண்டன் (சுயே), 18.ரமேஷ் (சுயே), 19.மணிகண்டன் (சுயே), 20.ரமேஷ்குமார்(சுயே), 21.ஜோதிவேல் (சுயே), 22.விஜய் (சுயே), 23.ராஜவர்மன் (சுயே).

வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ள தொகுதியில் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments