ஜெகதாப்பட்டினம் அருகே செல்லநேந்தல் கிராமத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு!



ஜெகதாப்பட்டினம் அருகே செல்லநேந்தல் கிராமத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மேலும் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி மூலம் தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பிரசாரத்தில் அறந்தாங்கி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் மோகன் பேசினார். .பின்னர் அப்பகுதியில் உள்ள மீனவ சமுதாயத்தில் உள்ள சிறுவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்து விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுடன் கோட்டாட்சியர் ஆனந்த் மோகன் செல்பி எடுத்துக்கொண்டார். 

நிகழ்ச்சியில் மணமேல்குடி தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments