கோபாலப்பட்டிணத்தில் வீடு இடிந்து சேதம்



கோபாலப்பட்டிணத்தில் இன்று பெய்த தொடா்மழை காரணமாக வீடு இடிந்து சேதமாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் – ஆவுடையார் கோவில் தாலுகா, மீமிசல் - கோபாலப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பரக்கத் நிஷா (தந்தை: அப்துல் முனாப்) அவர்களின் வீடு இன்று ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை தாக்கத்தால் இடிந்து சேதமடைந்துள்ளது.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின் வீடு இடிந்ததால், இந்தக் குடும்பம் தங்கும் இடம் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், ஆவுடையார் கோவில் தாலுகா வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரடியாக வருகை தந்து, போர்க்கள அடிப்படையில் உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

புயல் பாதிப்பு காரணமாக அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிக அவசியமாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments