கோபாலப்பட்டிணம் ஷாஹின் பாக்கின் முக்கிய அறிவிப்பு


ஒருங்கிணைந்த ஷாஹின்பாக் கூட்டமைப்பு என்ற பெயரில் இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து கொண்டு தங்களுக்கு என ஒரு லெட்டர் பேட் அடித்துக்கொண்டு அதில் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை சார்ந்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு என பதிவிட்டிருந்தார்கள்.

அது சார்ந்து தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த ஷாஹின்பாக் நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட பொழுது அந்த அறிவிப்புக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தங்களிடமும் எந்த கலந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என மறுப்பு தெரிவித்தனர். 

மேலும் அந்தக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படும் நபர்கள் பற்றி விசாரித்த பொழுது, அவர்கள் இந்த தேர்தலில் சுயேச்சையாக  போட்டியிட முயற்சி செய்து, வேட்புமனு பரிசீலனை போது நிராகரிக்கப்பட்டவர்கள் என்றும், இஸ்லாமிய சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, தங்களுக்கு மட்டும் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படும் சில பாசிச சிந்தனை வாதிகளின் கைக்கூலிகளாக செயல்படுவதை அறிந்தோம். 

அவர்கள் ஷாஹின் பாக் என்கின்ற பெயரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடிய இந்த போராட்டத்தை, அதை தாங்கள் முன்னெடுத்தோம் என்ற பெயரில் வைத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் பெற விரும்புகின்றனர்.

அதுபற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது சில மலுப்பலான பதில்களையே தொடர்ந்து தெரிவித்து வந்தனர். 

கடைசியாக அவர்கள் பதிவிட்ட பதிவில் திராவிட கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதாகவும், அவர்களால் இஸ்லாமிய சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்றும், அவர்கள் திருட்டு திராவிட கழகங்கள் என்பதாகவும், ஆகவே நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு என்றும் பதிவிட்டு இருந்தனர்.

அந்த கூட்டமைப்பினர் என்று சொல்லிக் கொள்ளும் இரண்டு மூன்று நபர்கள், திராவிட கட்சிகளை வசைபாடுவது ஒருபுறமிருக்க, முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இஸ்லாமிய சமூகத்திற்காக போராடி வரும் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளை விட (இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளை புறந்தள்ளிவிட்டு) தாங்கள் சார்ந்திருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு என்று பதிவிட்டு, ஒட்டுமொத்த ஷாஹின் பாக் போராட்டக் களம் மற்றும் அதில் பங்கெடுத்த மக்களையும் கொச்சைப்படுத்தி உள்ளனர்.

தனிப்பட்ட முறையில் அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் இயக்கத்திற்கு ஆதரிப்பது தெரிவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் ஷாஹின் பாக்  கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த துரோகிகள் செய்யும் செயல்களை கோபாலபட்டினம் ஷாஹின் பாக் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் கோபாலப்பட்டினம் ஷாஹின் பாக் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக எந்த வகையிலும், தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை. அவரவர் விருப்பத்தின் படி அவர்கள் விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம்.

இப்படிக்கு

கோபாலப்பட்டிணம் ஷாஹின் பாக் குழு
புதுக்கோட்டை மாவட்டம்

+91 88389 86985 
+91 8681815683

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments