வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு 5 மாநில தேர்தலில் தபால் ஓட்டு வசதி இல்லை - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் அளித்த பதில் வருமாறு:-

வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மின்னணு தபால் ஓட்டு போட வசதியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் செய்யும் யோசனையை தேர்தல் கமிஷன் முன்வைத்தது. அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


அதனால், 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதியை அளிப்பது சாத்தியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments