புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறியதாக 181 வழக்குகள் பதிவு
 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நாளை(ஏப்.4) மாலையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுதல், கொடி கட்டுதல், பட்டாசு வெடித்தல், தகராறில் ஈடுபடுதல் என தேர்தல் விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமயம் தொகுதியில் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, புதுக்கோட்டையில் 40, அறந்தாங்கியில் 31, விராலிமலையில் 12, கந்தர்வக்கோட்டையில் 10 மற்றும் ஆலங்குடி தொகுதியில் 7 என 6 தொகுதிகளிலும் மொத்தம் 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments