கொடிக்குளம், அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.7) மின்தடை அறிவிப்பு!



அறந்தாங்கி கிராமியம் உபகோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை சனிக்கிழமை (பிப். 7) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறந்தாங்கி கிராமிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அறந்தாங்கி கிராமிய உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொடிக்குளம் (110/33-11KV) மற்றும் அமரடக்கி (33/11KV) ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

இதன் காரணமாக, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொடிக்குளம், மீமிசல், கோபாலப்பட்டிணம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்பலவானேந்தல், மற்றும் அமரடக்கி ஆகிய பகுதிகளில் நாளை 07.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் பராமரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் மின்தடை நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments